நினைவு

பக்கங்களை நிறைக்க
கவிதை எழுதவில்லை..
என் துக்கங்களை குறைக்க
கிறுக்குகிறேன்
உன் நினைவுகளோடு...
என்னிடம் உன்
நினைவுகள் இல்லை,
உன் நினைவுகளிடம் தான்
நான் இருக்கிறேன்...

நீயே சொல்

பேசலாம் என்றாய்,
பேசினேன்.
பார்க்கலாம் என்றாய்,
பார்த்தேன்.
நேசிக்கலாம் என்றாய்,
நேசித்தேன்.
இப்போது
மௌனமாய் இருக்கிறாயே,
நான் என்ன செய்ய??

வினா?

கவிதைக்கும் கால் வலி
வந்து விட்டதாம்..
எழுதி, எழுதி அனுப்புவதால்.
உனக்கேதும் வரவில்லைய???

பரவசம்


என் பேனா கூட
என்னை
போல் தான்..
உன் நினைவு
வந்ததும்
ஓர் இடத்தில
நிற்க மாட்டேன்
என்கிறது!!

நீ

உன் அன்பு?
மழை..
உன் கோபம்?
நெருப்பு..
உன் மனம்?
குழந்தை..
உன் இரக்கம்?
வானம்..
உன் தீண்டல்?
தென்றல்..
உன் வேகம்?
புயல்..
உன் பொறுமை?
நிலம்..
உன் பார்வை?
பசுமை..
உன் உள்ளம்?
அருவி..
உன் குரல்?
இசை..
உன் தூய்மை?
பனி..
உன் வெற்றி?
திண்ணம்..
உன் குணம்?
இமயம்..
உன் காதல்???
கவிதை..

என்னவனே


சுதந்திர
பட்டாம்பூச்சியாய்
சிறகடித்தேன்..
உலகமே
என்
தோட்டம்..
எங்கும்
என்
வண்ணம்
தெளித்து..
காற்றில்
கர்வமாய்
திரிந்தேன்..
அன்பால்
கைது
செய்தாய்..
நெஞ்சில்
சிறை
பிடித்தாய்..
கையில்
எனை
பிடித்தாய்..
என்
உயிர்
ஜெயித்தாய்..
உன்
அரவணைப்பில்
நான்
எனை
தொலைத்தேன்..
என்
சிறகொடித்தேன்..
உன்னில்
வீழ்ந்துவிட்டேன்..
எனக்கு
சிறகாகி,
உன்
உலகம்
காண
செய்வாயா ???

பிரிவு

நீ என்னை புரிந்து கொள்ளாமல்
புறகனித்த போது,
எனக்கே என்னை யார் என்று
புரிந்து கொள்ள முடியவில்லை..
என்னை பிடிக்காமல் போயிருந்தால்
சொல்லிவிடு
நிரந்தரமாய் போய் விடுகிறேன்..
என் கண்ணீர் உன்னை சுட்டால் கூட
பிடிக்காது என் கண்களை...

கடல்


சூரியன் மறையும் வேளை..
சிவப்பு மை பூசும் வானம்..
நீல தோகை விரித்தாடும்
மயில்களாய் கடல் அலைகள்..
சிற்பங்கள் செதுக்கும் சிற்பியாய்
மணல் கோபுரம் கட்டும் குழந்தைகள்..
முகம் மறைத்து காதல் பேசும் ஜோடிகள்..
முகம் மலர்ந்து குதூகலிக்கும் குடும்பங்கள்..
ஏதோ சொல்ல ஓடி வந்து வெட்கத்தோடு
ஓடி செல்லும் அலைகளின் மொழிகள்..
கால்களை வருடி செல்லும் பஞ்சு நுரைகள்..
வேகமாய் குரல் கொடுக்கும்
சுண்டல்கார சிறுவன், ஜோசிய கிழவி..
பொதி சுமக்கும் கழுதைகளாய்
மாறி போன குதிரைகள்..
இதற்கிடையில் கடலோடு ஏதோ
பூர்வ ஜென்ம பந்தம் போல
கண்கொட்டாமல் பார்க்கும் நான்..

பணம்

மனிதன் புரிந்து கொள்வான்
கடைசி நீர் துளி வற்றி போகும் போது..
கடைசி இலை காய்ந்து உதிரும் போது..
கடைசி விலங்கு கதறி இறக்கும் போது..
கடைசி நெல் மணி கருகி சரியும் போது..
மனிதன் புரிந்து கொள்வான்
பணத்தை தின்று பசி அடக்க முடியாதென்று,
மனிதன் புரிந்து கொள்வான்.