சூரியன் மறையும் வேளை..
சிவப்பு மை பூசும் வானம்..
நீல தோகை விரித்தாடும்
மயில்களாய் கடல் அலைகள்..
சிற்பங்கள் செதுக்கும் சிற்பியாய்
மணல் கோபுரம் கட்டும் குழந்தைகள்..
முகம் மறைத்து காதல் பேசும் ஜோடிகள்..
முகம் மலர்ந்து குதூகலிக்கும் குடும்பங்கள்..
ஏதோ சொல்ல ஓடி வந்து வெட்கத்தோடு
ஓடி செல்லும் அலைகளின் மொழிகள்..
கால்களை வருடி செல்லும் பஞ்சு நுரைகள்..
வேகமாய் குரல் கொடுக்கும்
சுண்டல்கார சிறுவன், ஜோசிய கிழவி..
பொதி சுமக்கும் கழுதைகளாய்
மாறி போன குதிரைகள்..
இதற்கிடையில் கடலோடு ஏதோ
பூர்வ ஜென்ம பந்தம் போல
கண்கொட்டாமல் பார்க்கும் நான்..
No comments:
Post a Comment