அம்மா


தன் வலி மறந்து
என் வலிக்கு
நோகிறாள்..
எத்தனை வயதானாலும்
குழந்தை போல
பார்க்கிறாள்..
உலகமே வெறுத்தாலும்
உயிர் கொண்டு
ரசிக்கிறாள்..
அன்பை தவிர
வேறேதும்
தெரியவில்லை அவளுக்கு..

காலம்


நினைப்பதை எல்லாம்
செய்யவிடுவதில்லை காலம்..
தான் நினைப்பதைத்தான்
நம்மேல் புகுத்துகிறது..
காலத்தை இழுத்துப்பிடித்து
காட்சிகளை மாற்ற
திறமை இல்லை எனக்கு..
காலத்தின் கணக்குகளை
கவனித்தபடி
நகர்கின்றன நாட்கள்..

புத்தகமே..


எழுத்தாளரின் மனசாட்சி..
எதிர்பார்ப்புகளின் வரைப்படம்..
காலத்தின் உறைநிலை..
அறிவின் கற்பகவிருட்சம்..
ஓய்வு நேரங்களில்
உனை கைகோர்கிறேன்
ஆனந்தமாய்..
வெறுமையிலும் தனிமையிலும்
உன் தோள் சாய்கிறேன்..
ஆறுதலாய்..

தெளிவதென்று??


உன் அழகை
கண் விரித்து பார்த்து..
உன் பேச்சை
வாய் பிளந்து கேட்டு..
உன் அருகில்
மதிமயங்கி போகிறேன்..
தெளிவதென்று??
இந்த காதல் போதை..

இது முடிவோ??


உலகின் ஓரத்தில்
தனிமரமாய்
நிற்பது போல்
ஓர் உணர்வு..
உன் நினைவுகளின்
முழு ஆக்கிரமிப்பில் நான்..
முதலோ..
இது முடிவோ??

அழகிய பயணம்..


உன் கை பிடித்து நடக்கையில்
தூரம் தொலைகிறது..
அன்னை மடி வாழ்க்கை
திருப்பி தந்தாய் உன் அன்பில்..
நம் எல்லா பயணமும்
அழகானது உன்னால்..

என்று சந்திப்போம்???


கல்லூரி நாட்களை கொண்டாடினோம்..
நட்பில் நமை மறந்தோம்..
காலசுழற்சியில் சிதறிப்போனோம்..
என்று சந்திப்போம்???
கவலையுடன் பார்க்கிறேன் நாள்காட்டியை...

பொய் முகம்...


பச்சோந்தி கூட,
தோற்று விடும்
போட்டி வைத்தால்..
புயல்வேக குணவேடம் போடும்
முகமூடி மனிதர்களிடம்..

பெண்ணே...


நீ நிலவு...பௌர்ணமி நிலவு..
ஒரு முழுமை உள்ளது உன்னிடம்..
இரவில்..நீ உறங்குவதால் தான்
நிலவு விழிகிறதோ???
விண்ணில் பல விண்மீன்
இருந்தும்
கண்ணை கவர்வது நிலவு..
மண்ணில் பல பெண்கள்
இருந்தும்
நெஞ்சில் நிறைந்தது நீ..

காதலே...


விழியின் வழி புகுந்தாய்
பின்
இதயம் தனில் உறைந்தாய்..
செயல்கள் தனில் கலந்தாய்
என்
உயிரிலும் நீ நிறைந்தாய்..
மூச்சில் உன்னை உணர்ந்தேன்
உன்
பேச்சில் என் பெயர் மறந்தேன்..
கவிதை புனைய வைத்தாய்
உன்னை
கனவிலும் தேட வைத்தாய்..
காதல் கற்று கொடுத்தாய்
மனம்
முழுதும் பித்து கொடுத்தாய்..

உலகம் மாறி போச்சு..


குழந்தை குணம் மாறி போச்சு..
வியாபார வாழ்கை ஆச்சு..
அன்புக்கு மதிப்பு போச்சு.
காசுதான் கடவுள் ஆச்சு..
சிரிப்புக்குள்ளும் வேஷம் ஆச்சு..
பந்தபாசம் எங்கே போச்சு..
நெஞ்சமெல்லாம் வஞ்சம் ஆச்சு..
நேசம் மறந்து நாள் பல ஆச்சு..
வாழ்க்கை ரொம்ப அவசரமாச்சு..
நல்லதெல்லாம் செத்து போச்சு..
எல்லாமே நவீனமாச்சு..
இந்த மனிதம் தான் எங்கே போச்சு???

குடிமகன்


சுழற்றி போட்டது போதை..
காணாமல் போனது வெட்கம்..
வேரோடு விழ்ந்தது குடும்பம்..
நல்ல குடிமகன்..