வீடு

கடற்கரை மணலில்
வீடு வாசல்
கட்டி இடித்தபோது
தெரியாது,
ஒரு நாள்
சொந்த இடம்
சொந்த வீடு
என் வாழ்வின்
லட்சியம் ஆகுமென்று..

காணி கணக்கெல்லாம்
காற்றோடு போனது..
சதுர கணக்கு
பேசும் காலமிது..
அறநூறு சதுரமே
சில லகரங்களை
தாண்டுகையில்..
இன்று சொந்தவீடு
ஆகாயத் தாமரை..

அங்கலாய்ப்புகளுக்கு பின்
ஏதும் வாங்க
வழி இன்றி
சோர்ந்து அமர்கையில்
வானொலியில் ஒலிக்குது
பாரதியாரின்
காணிநிலம் பாடல் - என்
விழியோரம் கண்ணீர்..

நேரமிருந்தால் வாசிக்கவும்..


கடினமாய் இருக்கிறது
என் சிறகு மனதிற்கு..
உன் கனவுகளிலும்
நினைவுகளிலும்
நான் இல்லாத பொது..
என்னை விட
வேறொன்றை
நீ அதிகமாய் நேசிக்கும்போது..
உன் வெளிநாட்டு மோகம்
ஏன் என் மேல் இல்லை??
உன் அந்தஸ்து தாகம்
ஏன் என் அன்பில் இல்லை??
தவறேதும் இல்லை உன்
விருப்பங்களில்,
தெரிந்தே
தவறி விழுகிறேன் உன்
புதைகுழி காதலில்..
மூழ்கி மரிக்கிறேன் உன்
உன் மந்தகாச புன்னகையில்..
வெற்றி பெறட்டும் உன் ஆசைகள்..
உன் எல்லா இலட்சியங்களும்
நிறைவேறட்டும்..

நீ மட்டும் போதும்
என்னும் என் சுயநல
கட்டுகளில் சிக்கிவிடதே..

--
காதலுடன் காத்திருக்கும்
உன் மனைவி..

உன் கோவம்

பிடிக்காத கவிதை போல
என்னை கசக்கி எறிந்து
மறக்கிறாய்..
குப்பை தொட்டி கூட
எனக்கு சொர்க்கம்தான்,
உன் விரல் பட்டு விழுந்ததால்..

நீ

கணவனான பின்னும்
காதலனாய் மின்னுகிறாய்
என் கனவிலும் ..

மதம்

ஏசுவும் சிவனும்
கைக்குலுக்கி
நண்பர்களாகி இருப்பார்கள்
நம் திருமனத்திற்கு வந்திருந்தால்,
உன் குடும்பமும்
என் குடும்பமும்
வந்ததால் தான்
கைகலப்பு ஆகிவிட்டதோ?

தேடல்

பிணமாகிறேன் நான் ..
என் உயிர்
நாம் சுற்றிய இடங்களை
சுற்ற கிளம்பி விடுகிறது
என் உடல் இல்லாமல்..