நான்...

சிலநாளாய் ஒரு புது வித தவிப்பு..
என்னை வெறுமையாக்கி முழுமை ஆக்க ஒரு எண்ணம்..
தொலைத்தவைகளை தேடாது
இருப்பவைகளையே தேடும்
இவ்வுலகம் வீணோ..
உருமாறி அணுவாகி
அண்டம் முழுதும் நீந்திய
ஞாபகம் சிந்தையில்..
கனவோ
நிஜமோ
நான் தான் வாழ்கிறேனா?
இல்லை இவ்வோரம் நின்று
நான் வாழ்வதை  காண்கிறேனா?
கோடியில் ஒருவன் தான் நானா?
இல்லை
கோடியும் நானா ?
விடை தேடி வினா ஆகிறேனா?
இல்லை
வினா கேட்டு விடை ஆகிறேனா ?

நான் முதலா? முடிவா?
வினாவா? விடையா ?
பிம்பமா ? நிஜமா ?

ஆசை

நரை கூடும் வேளையிலும்
உன் மடி சாய வேண்டும்..
கரையாத காதலோடு
கண் மூட வேண்டும்..

காதல்

நீ என்னை நேசிப்பதை 😍 கண்டு  வியந்து, என்னை நான் நேசிக்க முயற்சிக்கிறேன் ...

#Valikalaye 😂

Vazhkai nammala poratti eduthaalum adhayellam marachuttu, enakku ellaame inba mayam nu status podra sugam iruke...
Ada ada ada...

கேடி புருஷா...

என்னை கவனிக்காதது போல் நடிப்பதை நான் கவனிக்கிறேனா என நீ கவனிக்கும் பொது கவனித்துவிட்டேன் உன்னை ..