சிலநாளாய் ஒரு புது வித தவிப்பு..
என்னை வெறுமையாக்கி முழுமை ஆக்க ஒரு எண்ணம்..
தொலைத்தவைகளை தேடாது
இருப்பவைகளையே தேடும்
இவ்வுலகம் வீணோ..
உருமாறி அணுவாகி
அண்டம் முழுதும் நீந்திய
ஞாபகம் சிந்தையில்..
கனவோ
நிஜமோ
நான் தான் வாழ்கிறேனா?
இல்லை இவ்வோரம் நின்று
நான் வாழ்வதை காண்கிறேனா?
கோடியில் ஒருவன் தான் நானா?
இல்லை
கோடியும் நானா ?
விடை தேடி வினா ஆகிறேனா?
இல்லை
வினா கேட்டு விடை ஆகிறேனா ?
நான் முதலா? முடிவா?
வினாவா? விடையா ?
பிம்பமா ? நிஜமா ?
அது ஒன்னும் பிரச்சனை இல்ல! காக்டெயில் ராவா அடிச்சா இப்படி தோணும். மோர்ல எழுமிச்ச சாறு கலந்து சாப்பிடு எல்லாம் சரி ஆயிடும்...
ReplyDeleteஅருமை! மனப்புரவி மொழிப்புழுதி கிளப்ப நினைத்து புழுதியில் அழுந்திப் போயிற்றோ?
ReplyDeleteromba serial pappingilo..,...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete