வெறுமை


மன அமைதிக்காக
கடற்கரை சென்றேன்.
ஓடி வந்த அலைகள்
ஏதோ சொல்ல துடிக்க,
அலைகளை உற்று
பார்த்தேன்.
காதுகளை கூர்மையாக்கி
கேட்டேன்.
அலைகள் எழுகையில் அதில்
உன் பிம்பம்.
பிடிக்க எழுந்தேன்,
ஒளிந்து, மறைந்து
விளையாட்டு காட்டியது
உன் முகம்.
அலைகளின் மொழிகள்
உன் பெயரை
எதிரொலிக்க,
சப்தமிட்டு கதறினேன்.
கடலின் பேரிரைச்சலின் முன்,
என் காதலின் அலறல்
எடுபடவில்லை.

ஒன்று மட்டும் சொல்கிறேன்,

உன் இதயம் கூட
என் அளவு
உனக்காய் துடித்திருக்காது...

2 comments: