இதை மட்டும் நான் எழுதலைங்கோ...

பெறுநர்,

முதல்வர் கலைஞர்.,
தலைமை செயலகம்.,
சென்னை

ஐயா.,

செம்மொழி மாநாடு நடத்துனீங்க..
எங்கும் தமிழ்.,
எதிலும் தமிழ்னு சொன்னீங்க...
ஆனா ஒரு இடத்துல மட்டும்
சுத்தமா தமிழ் இல்லைங்களே..
அங்கிட்டு எல்லாமே இங்கிலீஷ்ல
தாங்க இருக்கு..

நீங்கதான் சீக்கிரம் இதுக்கு
ஒரு நல்ல முடிவா எடுக்கணும்..
அந்த இடம் - நம்ம டாஸ்மாக்

அங்கே இருக்கிற சரக்குக்கு
எல்லாம் தமிழ்ல பேர் வெச்சி
தமிழை வளர்க்கணும்க..

நானே சில பேர் யோசிச்சி
வெச்சிருக்கேன்..
உங்களுக்கு திருப்தி இல்லைன்னா
ஒரு குழு அமைச்சி நல்ல நல்ல பேரா வைங்க..

மிடாஸ் கோல்ட் - தங்க மகன்
நெப்போலியன் - ராஜராஜ சோழன்
கோல்கொண்டா - கங்கைகொண்டான்
வின்டேஜ் - அறுவடை தீர்த்தம்
ஆபீஸ்ர்ஸ் சாய்ஸ் - அலுவலர் தேர்வு
சிக்னேச்சர் - கையெழுத்து
ஓல்டு மாங்க் - மகா முனி
ஜானி வாக்கர் - வெளிநடப்பு
கார்டினல் - பொதுக் குழு
மானிட்டர் - உளவுத் துறை
மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி
ராயல் சேலஞ்ச் - நாற்பதும் நமதே
ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000

வாழ்க தமிழ்..
வாழ வைங்க தலைவரே....

9 comments:

  1. நீ எந்த சரக்கு அடிக்கிற லதா ???

    ReplyDelete
  2. அதெல்லாம் உன் வேலைடா...

    ReplyDelete
  3. company கொடுக்கதான் கேட்டேன்.........

    ReplyDelete
  4. கொழுப்பு தானே உனக்கு...
    இருடா சுசித்ராகிட்ட மாட்டி விடுறேன்..

    ReplyDelete
  5. தண்ணி அடிக்க கூப்பிடது நீதான............
    சுசி கிட்ட சொல்லிக்கோ என்னக்கு no problem ..........

    ReplyDelete
  6. அதுவா.. ஆமாடா...
    பாலாறு தண்ணி வரலைடா..
    அதான் அடிபம்ப்ல தண்ணி அடிக்க கூப்பிட்டேன்..
    இன்னைக்கு வேலைக்காரங்க வேற வரல..
    வந்து தண்ணி அடி...
    சரியாடா குரங்கு???

    ReplyDelete
  7. எல்லா சரக்குக்கும் தமிழ்ல பேர் வச்ச நீ, அந்த கடைக்கும் தமிழ்ல ஒரு பேர் வச்சிருக்கலாமே?
    யோசிக்க முடியலனா நான் ஒரு புத்தகத்துல படிச்சத சொல்றேன்.
    "பல'சரக்கு' கடை"
    பேர் நல்லா இருக்கா?

    ReplyDelete
  8. சரிதான். பெயர் நல்லா இருக்கு..

    ReplyDelete