தேவதை..
குடும்பத்துடன்
கடைவீதியில் ஒரு
விடுமுறை நாளில் ..
வீதி உலா..
ஆரம்பமாக
ஆடையகம் ஒன்றினுள்
ஆனந்தமாய்
அணிவகுத்தோம்..
கடைக்குள்
நுழைந்ததும் கருப்பு
பொம்மைகளை
தேடின கண்கள்..
அவைகளின்
ஆடைகள்தான் எனக்கு
பொருந்துமேன்னும்
நம்பிக்கையினால்..
பல சமயங்களில்
கருகித்தான் போகிறது
மனசு..
சபைக்கு
ஒத்துவராத என்
கருப்பு நிறத்துக்கு..
ஆயினும் தேனாய்
தித்திக்கிறேன் என்
தாயின் பார்வைக்கு
மட்டும்..
என்ன??
காக்கைக்கும்
தன் குஞ்சு
பொன்குஞ்சா??
ஆனால் அவள்
காகம் இல்லையே!!
விழித்திறந்து பாருங்கள்
என் தேவதையை...
அங்கலாய்க்காமல்
ஆடைஎடுத்து,
வைத்து பார்த்து,
திருஷ்டி சுத்தி,
உச்சிமுகர்ந்தாள்
என் தேவதை..
திருப்தியாய்
பயணத்தை தொடர்ந்தேன்
அவளில் நிறைமுகத்தில்
மயங்கி...
No comments:
Post a Comment