ஏதோ சொல்ல ஓடி வந்து
சொல்லாமல் திரும்பி செல்லும் அலைகள்..
கரை காதலிக்கு நுரை மல்லி சூட்டி
அழகு பார்க்கும் நீல கடல்..
அலையிடும் ஓசைக்கும் அர்த்தங்கள் உண்டு..
தனிமையில் கேட்க புரியும் அலையின் மொழி..
சோகத்தில் அலையோசை கதறலாய் கேட்கும்..
இன்பத்தில் அதுவே எக்காளம் இசைக்கும்..
No comments:
Post a Comment