தேடுகிறேன்..
தேடுகிறேன்..
உலாவிய இடங்கள் தோறும்
உரையாடின சொற்கள் தோறும்
தேடுகிறேன்..
கலை ரசிக்கும் கண்களை
கபடம் மறந்த முறுவலை
தேடுகிறேன்..
கிடைத்தபாடில்லை..
எங்கு தொலைந்தாய்??
என்னுள் தொலைத்துவிட்டு
வெளியில்
தேடுகிறேன்..
மனதில் இருத்திக்கொண்டு
கனவில்
தேடுகிறேன்..
No comments:
Post a Comment