சிலநாளாய் ஒரு புது வித தவிப்பு..
என்னை வெறுமையாக்கி முழுமை ஆக்க ஒரு எண்ணம்..
தொலைத்தவைகளை தேடாது
இருப்பவைகளையே தேடும்
இவ்வுலகம் வீணோ..
உருமாறி அணுவாகி
அண்டம் முழுதும் நீந்திய
ஞாபகம் சிந்தையில்..
கனவோ
நிஜமோ
நான் தான் வாழ்கிறேனா?
இல்லை இவ்வோரம் நின்று
நான் வாழ்வதை காண்கிறேனா?
கோடியில் ஒருவன் தான் நானா?
இல்லை
கோடியும் நானா ?
விடை தேடி வினா ஆகிறேனா?
இல்லை
வினா கேட்டு விடை ஆகிறேனா ?
நான் முதலா? முடிவா?
வினாவா? விடையா ?
பிம்பமா ? நிஜமா ?